தீவிரமடைந்த மோந்தா புயல் ... 16 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்!
வங்கக்கடலில் உருவான மோந்தா புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வடக்கு முதல் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (அக். 28) காலை 5.30 மணிக்கு தீவிரப் புயலாக வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது இது காக்கிநாடாவிலிருந்து தெற்கே 270 கி.மீ தூரத்திலும், விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கே 340 கி.மீ தூரத்திலும் உள்ளது. மாலை அல்லது இரவில் காக்கிநாடா மற்றும் மச்சிலிப்பட்டினம் இடையே புயல் கரையைக் கடக்கும் எனவும், அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவின் 16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
புயல் தாக்கம் எதிரொலியாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கடலோர மக்களை நிவாரண முகாம்களுக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார். காக்கிநாடா மற்றும் கோனசீமா பகுதிகளில் மட்டும் 10,000 பேர் பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் மீட்பு குழுக்கள் தயாராக உள்ளன. அதேபோல் தெற்கு ஒடிசாவின் 8 மாவட்டங்களிலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் அங்கும் மக்களை பாதுகாப்பாக மாற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும், தீயணைப்புத் துறை வீரர்களும் இணைந்து 5000 பேர் கொண்ட அணிகள் தயார் நிலையில் உள்ளனர்.
புயல் தாக்கம் காரணமாக ஒடிசாவில் அக். 30 வரை பள்ளிகள், அங்கன்வாடிகள் மூடப்பட்டுள்ளன. ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழகத்திலும் புயல் தாக்கம் காரணமாக சென்னையைத் தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேசமயம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் நேரில் ஆய்வு செய்தார். தெற்கு மத்திய ரயில்வே, அவசியமற்ற ரயில் பயணங்களைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!