நீட் பயிற்சி மாணவி தற்கொலை... கோட்டாவில் தொடரும் சோகம்!!
இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு எழுதுவது அவசியமாகிறது. மாநில பாடத் திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மருத்துவ படிப்பில் சேரலாம் என்ற நிலைமை மாறி அகில இந்திய அளவிலான நீட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.
நீட் நுழைவுத் தேர்வில் மிக அதிக மதிப்பெண் பெற்றால்தான் அரசு மருத்துவ கல்லூரிகளில் எளிதாக இடம் கிடைக்கும். நீட் தேர்வில் சொற்ப மதிப்பெண்கள் எடுத்தாலும் பல லட்சம் பணம் கட்டி தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துவிட முடியும்.
கிராமப்புற, ஒடுக்கப்பட்ட ஏழை எளிய வீட்டு பிள்ளைகள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் மருத்துவ படிப்பு கனவுகள் காணாமல் போகின்றன . இதனால் பல மாணவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட், ஜேஇஇ உள்ளிட்ட தேர்வுகளுக்காக மட்டுமே ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. கோட்டா பயிற்சி மையங்களில் பல லட்சம் ரூபாய் பணம் கட்டி சேர்ந்துவிட்டால் நீட் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற முடியும் என்ற கனவில் சுமார் 3 லட்சம் மாணவர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த மாணவி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியில் வசித்து வருபவர் 2023 தொடக்கத்தில் இருந்து இது 25வது தற்கொலை என்பது குறிப்பிடத்தக்கது. 2022-ல் கோட்டாவில் 15 மாணவர்களும், 2019-ல் 18, 2018-ல் 20, 2017-ல் 7, 2016-ல் 17 மற்றும் 2015-ல் 18 என ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு அழுத்தங்களால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
இதில் 2023-ல் தான் இதுவரை இல்லாத அளவு 25 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. தற்கொலையை தடுக்கும் வகையில் கல்லூரி விடுதிகளில் ஸ்பிரிங் கொண்ட மின்விசிறிகள் பொருத்தப்பட கோட்டா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்படி, ஸ்பிரிங் கொண்ட மின்விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விதிகளை பின்பற்றாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!