undefined

வங்கக்கடலில் அடுத்தடுத்து  2 காற்றழுத்த தாழ்வுப்பகுதி ... வானிலை ஆய்வு மையம் அலெர்ட்! 

 
 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கியது. இதன் பின்னர் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது. அதன்பின் உருவான மற்றொரு தாழ்வுப்பகுதி மோந்தா புயலாக மாறி, ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்து சென்றது. அதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது.

இந்நிலையில், நவம்பர் மாதத்தில் வடகிழக்குப் பருவமழை மேலும் தீவிரமடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,  நவம்பர் 14 ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது.

மேலும், அதன் சில நாட்களில், நவம்பர் 19 ஆம் தேதி அந்தமானக் கடல் பகுதியில் இன்னொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் மழை தீவிரமடையும் வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!