சரிந்து  விழுந்த 2  மாடிக்கட்டடம் !! ஒருவர் பலி!! 16 பேர் படுகாயம்!! மீட்பு பணிகள் தீவிரம்!!

 

இந்தியாவில் விரைவில் பருவமழை தொடங்க உள்ளது.இதனையடுத்து பழைய இடிந்து விழும் நிலையில் இருக்கும் கட்டிடங்களில் வசிப்பவர்களை அப்புறப்படுத்த மும்பை மாநகராட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அபாயகரமான கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அவர்களை விரைவில் வேறு இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தியிருந்தது. 

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ரா மேற்கில் உள்ள சாஸ்திரி நகரில் நேற்று இரவு இரண்டு மாடிக்கட்டடம் ஒன்று இடிந்து விழுந்திருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினரும், போலீசாரும் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இதில், 56 வயதான ஷாநவாஸ் ஆலம் என்பவர் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். மேலும், 16 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிலர் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களை மீட்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து அமைச்சர் ஆதித்ய தாக்கரே தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து பிரஹன்மும்பை மாநகராட்சி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சாஸ்திரி நகரில் உள்ள ஜி+2 வீடு இடிந்து விழுந்ததில் துரதிஷ்டவசமாக ஒருவர் உயிரிழந்தார். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன. 16 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.” என்று தெரிவித்துள்ளது.இடிந்து விழுந்த கட்டடம் ஆபத்தானது என்று ஏற்கனவே மும்பை மாநகராட்சி நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் அக்கட்டடத்தை காலி செய்யாமல் மக்கள் அதில் வசித்து வந்தது குறிப்பிடதக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை