ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள்... 20 செமீ வரை கனமழை?
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் 21-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, விரைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனுடன் சேர்ந்து அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
இதனால் ஒரே நேரத்தில் இரண்டு புயல் சின்னங்கள் உருவாக இருக்கின்றன. இதன் தாக்கம் தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் காணப்படக்கூடும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூழ்நிலை காரணமாக, அக்டோபர் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் தமிழகத்தில் குறைந்தபட்சம் 12 செ.மீ. முதல் அதிகபட்சம் 20 செ.மீ. வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், 'ஆரஞ்சு எச்சரிக்கை' அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!