ஆற்றில் குளித்தபோது வெள்ளத்தில் அடித்துச் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழப்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே ஆற்றுக்கால்வாயில் குளித்தபோது வெள்ளத்தில் அடித்துச் சென்ற இரு வாலிபர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. ராணிப்பேட்டை பனப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (21) மற்றும் சென்னை திருவெற்றியூரை சேர்ந்த அருண் (24) ஆகியோர் ஒரே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். விடுமுறை நாளாக இருந்ததால், இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து பூண்டி கூன்மடை பாலாற்று பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.
அங்கு மதியம் குளிக்கச் சென்ற மணிகண்டனும் அருணும் திடீரென அதிகரித்த நீர்வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு வரை அவர்களை காண முடியவில்லை.
நேற்று காலை மீண்டும் தொடங்கிய தேடுதல் பணியில், சம்பவ இடத்திலிருந்து சில தூரத்தில் மணிகண்டனும் அருணும் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!