undefined

 ஒரு நாள் கூட ஆகல... 25 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள்... ’லியோ’ ட்ரெய்லர் டிரெண்டிங்கில்!!

 

இளைய தளபதியின் அடுத்த திரைப்படம் லியோ . லியோ திரைப்படம் அக்டோபர் 19 ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் இந்த திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.   இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டதில் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

<a href=https://youtube.com/embed/Po3jStA673E?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/Po3jStA673E/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="LEO - Official Trailer | Thalapathy Vijay | Lokesh Kanagaraj | Anirudh Ravichander" width="640">

அடுத்தடுத்த போஸ்டர் அப்டேட்களை வெளியிட்டு ரசிகர்களை திருப்தி படுத்தி வருகிறது படக்குழு. அந்த வகையில் நேற்று காஷ்மீர் உறைபனியில் ரத்தம் தெறிக்க கண்கள் மிரள நிற்கும் த்ரிஷாவின் புகைப்படம் போஸ்டராக வெளியானது. மாலை 6.30மணிக்கு லியோ திரைப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியானது. 2 நிமிடம் 44 நொடிகள் ஓடக்கூடிய லியோ ட்ரெய்லரில்   விஜய், அர்ஜூன், கௌதம் மேனன், மிஷ்கின், சஞ்சய் தத், திரிஷா   காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.

இந்த ட்ரெய்லர் தற்போது 25 மில்லியன் பார்வைகளை கடந்து சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது . இந்த கொண்டாட்டத்தை ரசிகர்கள் பல வகையில் வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நாளை முதல்வரே அரியாசனம் உனக்காக காத்திருக்கு வா தலைவா என மதுரை மாநகரம் முழுவதும் இரவோடு இரவாக  போஸ்டர்  அடித்து கொண்டாடியுள்ளனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!