3 குழந்தைகள் கண்மாயில் மூழ்கி உயிரிழப்பு!! கதறி துடித்த பெற்றோர்!!

 

தமிழகத்தில் சமீபகாலமாக குழந்தைகள் ஆபத்து அல்லது விபத்தில் சிக்கி  உயிரிழப்பது  அதிகரித்து வருகிறது.  பெற்றோர்கள் கவனமாக இருக்கும் படி அரசு தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. குளங்கள், நீர்நிலைகளில் குழந்தைகள் விளையாட விடாமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது. இருந்த போதிலும் இதே போல் தொடர் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு குன்னுத்துப்பட்டியில் வசித்து வருபவர்  ராஜா . இவருடைய மகள் 8 வயது முத்து, ராஜாவின் தம்பி சின்னராஜா மகன் 8வயது கிருத்திக், சந்திரன் மகள் 8வயது தனலட்சுமி மூவரும் நண்பர்கள் . அருகில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தனர். எந்நேரமும் நண்பர்கள் மூவரும் சேர்ந்து விளையாடுவது வழக்கம். அதே போல் நேற்றும் வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டத்துக்கு விளையாடச் சென்றனர். அங்கிருந்த கண்மாயில் இறங்கி தண்ணீரைத் தெளித்து விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாடிக் கொண்டே தண்ணீரின் நடுப்பகுதிக்கு வந்து விட்டனர்.

தண்ணீரில் மூழ்கி முத்து, கிருத்திக், தனலட்சுமி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகளை காணாத பெற்றோர் எல்லா இடத்திலும் தேடி கண்மாயில் விழுந்திருக்கலாம் என சந்தேகித்தனர். உடனே  கிராமத்தினர் கண்மாயில் இறங்கி குழந்தைகளின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விளையாடச் சென்ற குழந்தைகள் மூவரும் சடலமாக கிடந்ததை கண்டு பெற்றோர்கள் கதறி துடித்தனர். அப்பகுதியில் இச்சம்பவம்  பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம்