கடல் அலையில் சிக்கி உயிரை விட்ட 3 சிறுமிகள்!! சுற்றுலாவில் நேர்ந்த பரிதாபம்!!

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ராஜகம்பீரம் பகுதியைச் சேர்ந்த சேவியர், தனது உறவினர்கள் 15 பேருடன் நாகை மாவட்டம் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்குச் சொந்தமான விடுதியில் தங்கியுள்ளனர்.

இன்று காலை அவர்கள் அனைவரும் வேளாங்கண்ணியில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்து விட்டு வந்து கடலில் குளித்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சேவியரின் மகள்களான அரோக்கியா ஷெரீன் (19), ரியானா (13), அதே பகுதியை சேர்ந்த பெஞ்சமின் மகள் சஹானா (14) ஆகிய 3 பேரும் சிக்கி இழுத்து செல்லப்பட்டு சிறிது நேரத்தில் நீரில் மூழ்கினர்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த உடன் வந்தவர்கள் காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டனர். இதையடுத்து சுற்றுலா பயணிகளில் சிலர் கடலுக்குள் நீந்தி சென்று மயங்கிய நிலையில் இருந்த 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து கீழையூர் கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேளாங்கண்ணிக்குச் சுற்றுலா வந்த 3 பேர் கடல் அலைகள் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை