3000 வருஷத்துக்கு முந்தைய தங்க காதணி!  ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிப்பு! தலைநிமிர்ந்த தமிழர் நாகரிகம்!

 

உலகின் மூத்த மொழி தமிழ், தமிழர் நாகரிகம் என சொல்லி வரும் போதெல்லாம் இந்தியாவின் தேசிய மொழி இந்தி என இந்தியாவில் இருப்பவர்களே தமிழர்களின் பெருமையை  தலை நிமிர செய்யவிடாமல் தடுத்து வந்தனர். தற்போது, 3000 வருஷங்களுக்கும் பழமையான தங்கத்தினால் செய்யப்பட்ட காதணியை ஆதிச்சநல்லூரில் கண்டு பிடித்துள்ளனர். இது, தமிழரின் நாகரிகத்தையும், பண்டைய தமிழர்களின் பொருளாதார ஸ்தீரத்தையும், கலையுணர்வையும் தெரியப்படுத்துகிறது. மத்திய தொல்லியல் துறை சார்பில் ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது.  கடந்த  8 மாதங்களாக நடந்து வரும் அகழாய்வு பணியில் இதுவரை  70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

தற்போது அலெக்சாண்டர் இரியா அகழாய்வு செய்த இடத்தில் 30 செமீ ஆழத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட காதணி ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள இந்த காதணி 3000 ஆண்டுகள் பழமையானது என ஆய்வறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் நாகரிகத்துடனும், தங்கத்தை தரம் பிரித்து  பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருந்ததை இந்த அகழ்வாய்வு உறுதி செய்துள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை