ஒருத்தரும் சேரலை... வெறிச்சோடிய 37 இன்ஜினியரிங் கல்லூரிகள்!

 

10 வருடங்களுக்கு முன்பு வரை ஊருக்கு ஒரு இன்ஜினியர் தான் இருப்பது வழக்கம்.ஆனால் இன்றைய நிலவரப்படி வீட்டுக்கு 3 அல்லது 4 இன் ஜினியர்கள் இருக்கின்றனர். ஒரு வகையில் வளர்ச்சி தான் என்ற போதிலும் இதே போல் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பொறியியல் கல்லூரிகள் என்ற போர்டு வைத்துள்ளனர். அந்த அளவு பொறியியல் படிப்பு மலிந்து விட்டது .இதற்காக இந்தியா முழுவதும் ஜேஇஇ நுழைவுத்தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை முடிந்து கல்லூரிகள் தொடங்கிவிட்ட நிலையில்  நாடு முழுவதும் 37 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


ஒரு காலத்தில் பொறியியல் படிப்பு பெரும்பாலான மாணவர்களின் கனவாக இருந்து வந்தது.மருத்துவர்,  இன்ஜினியர் தான் அனைவரின் வாயில் இருந்தும் வரும் வார்த்தைகளாக இருக்கும். அந்த அளவுக்கு பொறியியல் படிப்புக்கு மவுசு இருந்தது. அதனால் ஏராளமான கல்லூரிகள் புதிது புதிதாக தோன்றின.  ஏராளமான மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்து முடித்து வெளியே வந்தனர். ஆனால் அத்தனை பேருக்கும் வேலை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் மாணவர்கள் பொறியியல் படிப்பை தேர்வு செய்ய தயங்கி வருகின்றனர்.  


இப்போது நிலைமை தலைகீழாக மாறி, இன்ஜினியரிங் படிப்பை நோக்கி செல்லக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக   குறைந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை   442 இன்ஜினியரிங் கல்லூரிகளில் 157000 இடங்கள்  உள்ளன.பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ஜூலை 22ம் தேதி தொடங்கியது. தற்போது வரை 2ம்  கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 208 பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீத இடங்கள் நிரம்பி உள்ளன. 126 பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள் நிரம்பி உள்ளன. நல்ல கட்டமைப்பு கொண்ட சில கல்லூரிகளில் மட்டும் 80 சதவீத இடங்கள் பூர்த்தி அடைந்துள்ளன. 37 பொறியியல் கல்லூரிகளில் ஒரு இடம் கூட தற்போது வரை பூர்த்தி செய்யப்படவில்லை. இதேநிலைத் தொடர்ந்தால் வருங்காலத்தில் பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூடக்கூடிய சூழல் உருவாகலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை