undefined

 3வது திருமணம் செய்த பெண் அடித்தே கொலை... கணவர் கைது!

 
 


திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே 3வது திருமணம் செய்த பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள அயன்சிங்கம்பட்டி மடத்துதெருவைச் சேர்ந்த பலவேசம் மகள் முத்துலட்சுமி (30). இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மூலச்சியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான முருகன் (42) என்பவரை முத்துலட்சுமி 3வதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் வீட்டில் முத்துலட்சுமி தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். நேற்று காலையில் இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக இது குறித்து மணிமுத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அம்பை துணை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, முத்துலட்சுமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரணைத் தொடங்கினர். வீட்டில் முருகனும் இல்லை. தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. அதுபோல் நேற்று முன்தினம் இரவிலும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் அருகில் கிடந்த கட்டையால் தனது மனைவி முத்துலட்சுமியின் தலையில் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே முத்துலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

எனினும் கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா?, வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வந்த நிலையில், தலைமறைவான முருகனை பிடித்து கைது செய்தனர். 

முருகனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கல்லிடைக்குறிச்சி அருகே 3 திருமணம் செய்த பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!