அக்டோபர் மாதம் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள்... இவை எல்லாம் அவங்களோட இயல்புகளா இருக்கும் தெரிஞ்சுக்கோங்க!

 
அக்டோபர்

செப்டம்பர் மாதம் முடிவடைய 3 நாட்களே உள்ளன. 10ம் மாதமான ஆங்கில மாதத்தில் தான் நவராத்திரியும், தீபாவளியும். அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் இணைந்த நாள் என்பதால் இந்த மாதம் அஸ்வயுஜ மாதம் என்று அழைக்கப்படுகிறது. இம்மாதம் பாத்யமி முதல் நவமி வரை ஆதிபராசக்தியை அளந்து தேவி நவராத்திரி கொண்டாடப்படுகிறது. அமாவாசையின் கடைசி நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் ஜாதகத்தை சொல்ல, அவர் பிறந்த நேரம், மாதம் மற்றும் தேதி அவசியம். இதன் மூலம் அவர்களின் ஆளுமையை கண்டறியலாம்.   

அக்டோபரில் பிறந்தவர்களின் வாழ்க்கை மிகவும் நம்பிக்கைக்குரியது. ஆளுமையுடையவர்கள்.பேச்சில் ஜாலக்காரர்கள். இவர்களது வார்த்தைக்கு மயங்காதவர்களே இல்லை எனலாம். மந்திரம் போல் மாற்றிவிடுவார்கள் என்றாலும்  மற்றவர்களை விட தங்களை உயர்ந்தவர்கள் என நினைக்கும் ஆணவக்காரர்கள். அக்டோபரில் பிறந்தவர்கள் புதன் மற்றும் சுக்கிரனின் கூட்டு செல்வாக்கைக் கொண்டவர்கள். இதனால் அவர்களுக்கு செல்வத்திற்கும் அன்பிற்கும் என்றும் பஞ்சமிருக்காது.  

ராசிபலன்கள் ராசி ஜோதிடம்

காதல் திருமணம் புரியும் இவர்கள் உணர்ச்சிக்குவியல்களில் சொந்தக்காரர்கள்.  யார் உதவிக்காக வந்தாலும் அவர்களை வீழ்த்த நினைக்க மாட்டார்கள். எது சரி எது தவறு என்பதில் மிக உறுதியானவர்கள்.  நேர்மையான முடிவுகளை எடுப்பதில் சமர்த்தர்கள்.  இலக்கை அடையும் வரை ஓயமாட்டார்கள்.  வெற்றியின் உச்சத்தை அடைய வேண்டும் என்ற கனவை தாரக மந்திரமாக கொண்டு அதனை  நிறைவேற்ற முயற்சிகள் செய்வார்கள்.  அதே போல் அக்டோபரில் பிறந்தவர்கள் செலவாளிகள்.  நிறைய பணம் செலவிடுதல்,  பயணம் செய்வதில் ஆர்வம்,  புதிய வாகனங்கள், உடைகள் இவைகளை வாங்குவதில் பெரும் ஆர்வம் கொண்டவர்கள்.  வசதியான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ விரும்புகிறார்கள்.

ராசிபலன்கள் ஜோதிடம்

அக்டோபரில் பிறந்தவர்களின் அதிர்ஷ்ட எண்கள் 6, 1. 

வெற்றியைத் தரும் நிறங்கள்  : இளஞ்சிவப்பு, மெரூன், மயில் பச்சை, கருப்பு. 

சாதகமான  நாட்கள் வியாழன், வெள்ளி மற்றும் செவ்வாய்.

அதே போல் அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டால்  ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்பித்தல், கல்வி கற்க உதவி செய்தல்,  ஏழை பிராமணர்களுக்கு ஆடை மற்றும் உணவு தானம் செய்தல் போன்ற தொடர் சேவைகளால் வாழ்வில் அனுகூலமான சிறப்பான பலன்களை பெறலாம்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!

From around the web