விஷக்காயை சாப்பிட்டு 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி... நெல்லிக்காய் என நினைத்ததால் விபரீதம்...!!

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  பொன்னிவாடி கிராமத்தில் வசித்து வருபவர் அருண்குமார். இவரின்   மகள் யோகிதா , திலகராஜன் மகன் சித்தார்த், சிவானந்தனின் மகள் மோனா ஸ்ரீ, ரவிச்சந்திரனின் மகன் கவினேஷ்   4 குழந்தைகளும் வீட்டின் அருகே சாலையில் விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாட்டின் நடுவே அருகில் இருந்த செடியில் முளைத்த காய்களை நெல்லிக்காய் என நினைத்து விட்டனர்.

இதனையடுத்து காட்டாங்காய் எனப்படும்  விஷக்காயை சாப்பிட்டு வீட்டுக்குச் சென்றனர். அப்போது வீட்டில் 4 குழந்தைகளும் அடுத்தடுத்து வாந்தி எடுத்தன. பெற்றோர்கள் பதறி மற்ற குழந்தைகள் குறித்த தகவலை கேட்டு பதற்றமடைந்தனர் . குழந்தைகளை உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர்.  விஷக்காயை சாப்பிட்டதே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதற்கு காரணம் என குழந்தைகளிடம் மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனையில் தெரியவந்தது.

முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளை  அனுப்பிவைத்தனர்.நெல்லிக்காய் என்று நினைத்து விஷக்காயை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால்  அரசு மருத்துவமனை பகுதியில் பெரும் அதிர்ச்சியும்  பரபரப்பும் ஏற்பட்டது.

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!