24 மணி நேரத்தில் ஏரியில் மூழ்கி 4 பேர் பலி... பெரும் சோகம்!
காஞ்சிபுரம் மாவட்டம், ஏரிகள் நிறைந்த பகுதியாக விளங்குகிறது. அண்மையில் பெய்த கனமழையால் மாவட்டத்தின் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆந்திரா மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக, பொன்னை அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் தாமல் ஏரி தனது முழுக் கொள்ளளவான 18 அடியை எட்டி, ஒரு மாதமாக உபரி நீர் கலங்கல்கள் வழியாக வெளியேறி வருகிறது. ஏரி நிரம்பி வழியும் காட்சியை காண பொதுமக்கள் திரண்டுள்ள நிலையில், அபாயகரமான இடங்களில் குளிக்கச் செல்லும் பழக்கம் இன்னும் நீடிக்கிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமல் ஏரிக்கு பலர் கூடியிருந்தனர். அப்போது, தாமல் கிராமத்தைச் சேர்ந்த பாலா (19) மற்றும் வெள்ளை மணவாளன் (28) ஆகியோர் குளிக்கச் சென்றபோது ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக விரைந்து வந்து, தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இருவரின் உடல்களும் தேடி மீட்கப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.
இதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னும் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பாலாற்றில் குளிக்கச் சென்ற பூந்தமல்லியைச் சேர்ந்த சிவசங்கர் மற்றும் நத்தப்பேட்டை ஏரியில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கரநாராயணன் ஆகியோர் மரணம் அடைந்தனர். இதனால், கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் நால்வர் உயிரிழந்துள்ளனர். நீர்நிலைகளில் குளிக்கக் கூடாது என அதிகாரிகள் தொடர்ந்து எச்சரித்தும், இதுபோன்ற துயரச்சம்பவங்கள் தொடர்வது பெரும் வேதனைக்குரியதாகும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!