undefined

  கடலில் மூழ்கி 4 பெண்கள் உயிரிழப்பு... குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

 


சென்னை அருகே பெரியகுப்பம் கடற்கரையில் கடலில் மூழ்கி உயிரிழந்த நால்வர் பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பெத்திகுப்பம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த தேவகி, நம் பாளையத்தைச் சேர்ந்த பவானி, சின்ன கோபாலபுரம்-பெரிய கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த ஷாலினி மற்றும் திருவல்லிகாலனியைச் சேர்ந்த காயத்ரி ஆகிய நால்வரும் நேற்று பெரியகுப்பம் கடற்கரைக்கு சென்றனர்.

அப்போது அவர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது திடீரென நீரின் வேகம் அதிகரித்து, நால்வரும் கடலில் மூழ்கினர். மீட்புக்குழுவினர் முயற்சி மேற்கொண்டபோதும், அவர்களை உயிருடன் காப்பாற்ற முடியவில்லை.

இந்த துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், “உயிரிழந்த 4 பெண்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்” என உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவம் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!