undefined

120 மணி நேரம் சுரங்கத்தில் சிக்கிய 40 தொழிலாளர்கள்... கதறித் துடிக்கும் உறவினர்கள்..!!

 

உத்தராகண்ட்   மாநிலத்தில் சுரங்கத்தில் மண்குவியல் சரிந்து விழுந்ததில் ஒரு பக்க  சுரங்கப்பாதை அப்படியே மூடிக்கொண்டது. இதற்குள் 40 தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். தொடர்ந்து 7 நாட்களாக  சுரங்கத்தின் ஒரு பகுதியில் சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களின் குடும்பத்தினர் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.  நேற்று மாலை மீட்பு பணியின் போது, திடீரென சுரங்கப்பாதையில் இருந்து எழுந்த பலத்த ஓசை காரணமாக மீட்புப் பணிகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இடிபாடுகளை அகற்றி தொழிலாளர்களை, அடைவதில் மீட்புக் குழுவினருக்கு தொடர்ந்து தடங்கல்கள் ஏற்பட்டு வருகின்றன. நேற்று மாலை சுரங்கத்தினுள் எழுந்த மிகப்பெரும் விரிசல் சத்தம், மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள்,  வெளியே காத்திருக்கும் தொழிலாளர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சத்தை விளைவித்தது. தாய்லாந்து குழுவும் மீட்பு பணியில் களம் இறங்கியுள்ளது. அத்துடன்  உடனடியாக  மீட்பு பணிக்கு உதவுவதற்காக இந்தூரில் இருந்து இரண்டாவது மீட்பு எந்திரமும்  ராணுவ விமானத்தில் கொண்டுவர இந்திய விமானப்படை உதவியுள்ளது. இதனையடுத்து இன்று மீட்புபணிகள் மீண்டும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

60 நாட்களுக்கு சபரிமலை போறவங்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசம்

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!!