பகீர் வீடியோ...400 பைக்குகள் தீயில் கருகி நாசம்!!
பெட்ரோல் டீசல் விலைஉயர்வை அடுத்து மின்சார வாகனங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலம், விஜயவாடா, கே.பி நகர், சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகன விற்பனை மையம் உள்ளது. விஜயவாடா மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களுக்கான மொத்த விற்பனை நிலையம் இது தான்.இதனால் ஏராளமான இருசக்கர வாகனங்கள் விற்பனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
எலக்ட்ரீக் பைக்கிற்கு நீண்ட நேரம் சார்ஜ் ஏறியதால், நேற்று அதிகாலை திடீரென வெடித்து சிதறியது. இதிலிருந்து கிளம்பிய தீ அருகில் உள்ள பைக்குகளுக்கும் பரவியது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளிகள் உடனடியாக காவல் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் மளமளவென தீ அனைத்து தளங்களுக்கும் பரவி விட்டது. இதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் பைக்குகள் மீதும் பற்றியது. தீயணைப்புத் துறையினர், 3 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் தீ வேகமாக பரவியதில், பல கோடி மதிப்பிலான வாகனங்கள் எரிந்து சேதம் அடைந்தது. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!