481 பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!! மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க!!

 

தமிழகத்தில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அத்துடன் கலந்தாய்வுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். பெற்றோர்கள், மாணவர்களின்  தேவைகள், வசதிகளை எளிமையாக்கும் பொருட்டு அண்ணாப் பல்கலைக் கழகம் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி 481 பொறியியல் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் சென்னை கிண்டி,குரோம்பேட்டை பொறியியல் கல்லூரிகள் முதல் இரு இடத்தை பிடித்துள்ளன.


இதனைத் தொடர்ந்து, பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை பார்த்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மாணவர்கள் அதிகம் விரும்பக் கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது மேலும்,பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலைக் காண https://www.annauniv.edu/pdf/COLLEGE%20RANKING%20BASED%20ON%20PERCEPTION.pdf  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் க்ளிக் செய்து முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை