undefined

இந்தியர்களுக்கு 5,00,000 விசாக்கள்... அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜப்பான் திட்டம்!

 

இனி வரும் அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் இந்திய இளைஞர்களுக்கு விசா வழங்கப்படும் என ஜப்பான் துணைத் தூதர் தகாஹாஷி முனியோ தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில், இந்தோ–ஜப்பான் தொழில் வாணிகச் சபை நடத்திய ஜப்பானிய மொழி போட்டி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜப்பான் துணைத் தூதர் தகாஹாஷி முனியோ, பரிசுகளை வழங்கிய பின்னர் பேசினார்.

அப்போது, “இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் இஷிபாஷி ஷிகெரு இடையிலான அண்மைய உச்சி மாநாட்டில், பொருளாதாரம், தொழில்நுட்பம், கல்வி, பண்பாடு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தூய்மையான எரிசக்தி, ரோபோட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், விண்வெளி ஆய்வு போன்ற துறைகளில் கூட்டு ஆராய்ச்சிகளை முன்னெடுக்க இரு நாடுகளும் இணைந்து செயல்பட உள்ளன.

இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஜப்பான் விசா வழங்கப்படும். மேலும் 50 ஆயிரம் திறமையான பணியாளர்கள் மற்றும் இளம் தொழில் வல்லுநர்கள் ஜப்பானில் மேம்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் பணியாற்றவும், பயிற்சி பெறவும் வாய்ப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இந்தோ–ஜப்பான் தொழில் வாணிகச் சபை தலைவர் எஸ். பத்மநாபன், முன்னாள் தலைவர் ஆர். சுகுணா ராமமூர்த்தி, கௌரவச் செயலர் ஸ்ரீதர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?