அதிர்ச்சி... நேபாள சிறைகளில் இருந்து 540 இந்தியர்கள் தப்பியோட்டம்!
நேபாளத்தில் ‘ஜென் ஸீ குழு’ பேரணி தீவிர போராட்டங்களை கடந்த செப். 8 மற்றும் 9ம் தேதி முன்னெடுத்து, அந்நாட்டின் அரசாங்கத்தின்மீது தாக்குதல் மேற்கொண்டது. இதனால் 76 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின்போது அரசியல் குழப்பம் ஏற்பட்டது; நேபாளத்தில் ஆட்சி கவிழ்ந்து, முதல் பெண் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.
போராட்டங்கள் தொடர்ந்த நிலையில், நேபாளத்தில் வெவ்வேறு சிறைச்சாலைகளில் தண்டனைக் கைதிகளாக இருந்த சுமார் 540 இந்தியர்கள் தப்பியோடிவிட்டனர். செப். 9-ஆம் தேதிக்குள் 13,000-க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் தப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா தவிர பிற நாடுகளைச் சேர்ந்த 108 பேர் மாயமான நிலையில் உள்ளனர்.
மேலும், பல்வேறு குற்றச்சாட்டுகளால் தண்டனை பெற்ற சுமார் 5,000 நேபாள குடிமக்களும் மாயமான நிலையில் உள்ளனர். அவர்களைத் தேடி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!