தமிழகத்தில் 59 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்... காவல் துறை அறிவிப்பு!
தமிழக காவல்துறையில் நிர்வாகத் தேவையினாலும், ஒழுங்கீனங்கள் குறித்த காரணங்களினாலும், சிலர் விருப்பத்தின் அடிப்படையிலும் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் 59 துணை காவல் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அறிவித்துள்ளது.
தமிழக காவல்துறையின் பொறுப்பு தலைமை இயக்குநர் ஜி. வெங்கடராமன் இதற்கான உத்தரவை இன்று பிற்பகல் பிறப்பித்துள்ளார். இந்த மாற்றங்களில் முக்கியமான இடமாற்றங்களாக, திருவண்ணாமலை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டிஎஸ்பி எஸ். சுரேஷ் சண்முகம் மற்றொரு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், ஆரணி டிஎஸ்பி டி. பாண்டீஸ்வரி சிவகங்கை மாவட்ட குற்ற ஆவண காப்பகத்திற்கும், தர்மபுரி மாவட்ட பாலக்கோடு டிஎஸ்பி கே. எம். மனோகரன் கிருஷ்ணகிரி சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவிற்கும், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஎஸ்பி எம். சுகுமார் ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவிற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 59 டிஎஸ்பிக்களும் விரைவில் புதிய பொறுப்புகளை ஏற்று பணியில் சேரவுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!