தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!! தொடரும் இலங்கை கடற்படையின் அட்டுழீயம்!!

 

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். மேலும் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தனர். சமீபத்தில் பறிமுதல் செய்த இந்திய படகுகளை இலங்கையில் ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

மீனவர்கள் கைது செய்யப்படுவதும், பின்னர் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிக்கு பிறகு விடுவிக்கப்படுவதும் தொடர் கதையாகி வரும் நிலையில், புதுக்கோட்டையச் சேர்ந்த 6 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பாட்டினத்தில் இருந்து மொத்தம் 93 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதில் தேவராஜ், சுரேஷ், திருமேனி, வேல்முருகன், சுந்தரம், கார்த்திக் என்ற 6 பேர் கார்த்திக்குக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு சென்றனர். அப்போது திடீரென்று கார்த்திக் உள்பட 6 பேரையும் எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் அதிரடியாக கைது செய்தனர். அதன் பின்னர் 6 பேரும் மயிலட்டி துறைமுகம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தேவராஜ், சுரேஷ், திருமேனி, வேல்முருகன், சுந்தரம், கார்த்திக் ஆகிய 6 பேரையும் விரைந்து மீட்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்ததும் கிராம மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை