தீபாவளிக்கு 66 சிறப்பு ரயில்கள் இயக்கம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே மண்டலத்தில் பல்வேறு ரயில் நிலையங்களில் இருந்து சனிக்கிழமை (அக். 18) முதல் 20-ஆம் தேதி வரை 66 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு படி, 16 முதல் 22-ஆம் தேதி வரை மொத்தம் 147 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. கடந்த 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சென்னை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட நகரங்களில் மொத்தம் 37 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளுக்கு வசதி வழங்கப்பட்டு உள்ளது.
-
18-ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை, போத்தனூர், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் 24 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
-
19-ஆம் தேதி 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
-
தீபாவளி திருநாளான 20-ஆம் தேதி மதுரை, தூத்துக்குடி, தாம்பரம், மேட்டுப்பாளையம் போன்ற ஊர்களில் 23 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
-
21-ஆம் தேதி 25 சிறப்பு ரயில்கள், 22-ஆம் தேதி 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதன் மூலம் தீபாவளி பண்டிகைக்கு பயணிகள் வசதியாக பாதுகாப்பான மற்றும் நேரத்துக்கு ஏற்ப பயணமுடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!