மெக்சிகோ வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 76 பேர் பலி... 27 பேர் மாயம்!
மெக்சிகோ நாட்டின் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பெய்த கனமழை, கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தி பெரும் சேதத்தை விளைவித்துள்ளது. மலைப்பகுதிகளில் பாதைகள் முழுவதுமாக முடங்கியதால் மீட்புப் பணிகள் கடுமையாகும்.
மெக்சிகோ அரசு இன்று (அக். 20) வெளியிட்ட தகவல் படி, இதுவரை 76 பேர் உயிரிழந்ததாகவும், 27 பேர் மாயமானதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் முக்கிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டு, இணைப்பு வழிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிபர் கிளாடியா ஷீன்பாம் தெரிவித்தார்.
மேலும், இந்த பேரிடரில் பாதிக்கப்பட்ட சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு 10 பில்லியன் பெசோஸ் (ரூ. 4,800 கோடி) நிவாரண நிதி வழங்கப்படவுள்ளதாகவும், ஹிடால்கோ மற்றும் வெராக்ரூஸ் மாநிலங்களில் சுமார் 12,700 பாதுகாப்புப் படை வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறினார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!