undefined

நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்!

 

நெல்லை சரகத்தில் 8 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து டி.ஐ.ஜி.யும், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருமான சந்தோஷ் ஹடிமணி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:- குமரி மாவட்டம் இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்துக்கும், குளச்சல் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை மெஞ்ஞானபுரத்துக்கும், தக்கலை இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தென்காசி மாவட்டம் கடையநல்லூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் ராபர்ட் வீரகேரளம்புதூருக்கும், கடையநல்லூர் ஆடிவேல் ஆலங்குளத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதுதவிர குமரி மாவட்டத்தில் பணிபுரியும் அந்தோணியம்மாள், ஜெயலட்சுமி, உமா ஆகிய 3 பெண் இன்ஸ்பெக்டர்களும் அந்த மாவட்டத்துக்குள்ளேயே இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் குமரி மாவட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நேசமணி நகர் ஜெசி மேனகா, சுசீந்திரம் பெனடிக்ட், புதுக்கடை மகேந்திரன் ஆகியோர் நெல்லை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?