மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்திற்கு 9 மாநில விருதுகள்!
கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதில், சமீபத்தில் வெளிவந்து தென்னிந்திய அளவில் வெற்றிகரமாக ஓடிய மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் 9 பிரிவுகளில் விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது.
‘ஜான் ஈ மன்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிதம்பரம், தனது இரண்டாவது படமாக ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’யை இயக்கினார். கொடைக்கானலிலுள்ள குணா குகையை மையப்படுத்தி உருவான இந்த திரைப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது. தமிழிலும் இப்படம் ரூ.60 கோடிக்கும் மேல் வசூலித்ததோடு, உலகளவில் ரூ.225 கோடி வரை வசூல் செய்து மலையாள சினிமாவின் மிக அதிகம் வசூலித்த திரைப்படமாக அமைந்தது.
அந்த வெற்றியின் அங்கீகாரமாக, கேரள மாநில விருதுகளில் மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் (சிதம்பரம்), சிறந்த திரைக்கதை (சிதம்பரம்), சிறந்த ஒளிப்பதிவு (சிஜூ காலித்), சிறந்த துணை நடிகர் (சௌபின் சாகிர்), சிறந்த கலை இயக்கம் (அஜயன் சல்லிசேரி), சிறந்த ஒலி வடிவமைப்பு (சிஜின், அபிஷேக்), சிறந்த ஒலிக்கலவை (சிஜின், ஃபசல்) மற்றும் சிறந்த பாடலாசிரியர் (வேடன்) ஆகிய 9 விருதுகளை வென்றுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!