போக்குவரத்தை சீர்செய்ய 93 ரோந்து வாகனங்கள்!! முதல்வர்  தொடங்கி வைப்பு!! 

 

சென்னையில் போக்குவரத்து துறை காவலர்கள் ரோந்துப்பணிகளுக்கு பழைய வாகனங்களையே பயன்படுத்தி வருகின்றனர். இந்த வாகனங்கள்  சுமார் 10 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருவதால் பழையதாகி விட்டன. இவைகளுக்கு பதிலாக புதிய வாகங்களை வழங்க தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி பழைய வாகனங்களுக்கு பதிலாக புதிய நவீன ரக ரோந்து வாகனங்கள் கொள்முதல் செய்யப்படும். நவீன கட்டுப்பாட்டு அறையை பலப்படுத்தும் விதமாக பழுதடைந்த ரோந்து வாகனங்களை மாற்றி புதிய வாகனங்கள் பயன்பாட்டுக்கு வரப்படும் என .ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். 


இந்நிலையில் ரூ.14,71 கோடி மதிப்பிலான 93 போக்குவரத்து ரோந்து வாகனங்களின் பயன்பாட்டை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார்.மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படுகிறது.

இதனால் வருகிற 2026 வரை போக்குவரத்து நெரிசல் இருக்கலாம் எனவும் ஆய்வுகள் தகவல் வெளியிட்டுள்ளன. எனவே போக்குவரத்து நெரிசல் நிலைமையை சரி செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் போக்குவரத்து ரோந்து வாகனங்களைத் தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் உடனுக்குடன் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டு, மக்கள் பயனடையும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால் மக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை