நடுக்கடலில் படகில் தீவிபத்து!! 10 மீனவர்கள்  பரிதவிப்பு!!

 

 இந்தியாவின் கடலோர பகுதி கிராமங்களில் வசிப்பவர்கள் பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரம் மீன் பிடித்தல் தொழில் தான். இதில் பலவேறு ஆபத்துக்கள், இயற்கை பேரழிவு இருந்த போதிலும் இந்த மக்களுக்கு காலம் காலமாக செய்து வரும் தொழில் மீன்பிடித்தல் தான். இயற்கை பேரழிவுகளை வானிலை, செய்திகள் மூலம் அறிந்தாலும் திடீர் விபத்துக்களை அவ்வப்போது எதிர்கொள்ளதான் வேண்டியிருக்கிறது.


அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் பத்ரக் மாவட்டத்தில் உள்ள தாம்ரா பகுதியில் உள்ள தோசிங்கா கிராமத்தில் மீனவ மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை  சேர்ந்த 10 மீனவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். வீலர்ஸ் தீவு அருகே படகு சென்று கொண்டிருந்த போது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் படகில் தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ படகு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது.


இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் கூச்சலிட்ட நிலையில், அருகில் இருந்த மற்றொரு மீன்பிடி படகில் இருந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.இதைத்தொடர்ந்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர் மற்றும் கடற்படை போலீசார் விரைந்து சென்று படகில் இருந்து தப்பிய 10 மீனவர்களை மீட்டு பத்திரமாக கரைக்கு அழைத்து சென்றனர். படகில் திடீரென்று தீப் பற்றிக் கொண்டதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இந்த விபத்தில் இருந்து தப்பிய மீனவர் ஒருவர் கூறும்போது, ‘‘என்ஜின் அருகே தீப்பிழம்பு வெளிப்பட்டது’’ என்று தெரிவித்தார். இந்த சம்பவம் மீனவ கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!