ALERT! இந்தியாவில் மீண்டும் அதிகரிக்குது கொரோனா பாதிப்பு!

 

இந்தியாவில் கொரோனா தினசரி தொற்று ஏற்றம் இறக்கமாக பதிவாகி வருகிறது. அதைத்தொடர்ந்து பலி எண்ணிக்கையும் அதிகரித்தால் மக்கள் பீதியில் இருந்து வந்தனர். இந்நிலையில் தற்போது தினசரி கொரோனா தொற்று 2 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்து வருவதால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா தொற்று 2,338 ஆக இருந்த நிலையில், கடந்த ஒரே நாளில் 2,745 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 4 கோடியே 31 லட்சத்து 60 ஆயிரத்து 832 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 6 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த கொரோனா பலி 5 லட்சத்து 24 ஆயிரத்து 636 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2,236 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 17 ஆயிரத்து 810 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது மருத்துவமனையில் மொத்தம் 18 ஆயிரத்து 386 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் 1,93,57,20,807 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 10,91,110 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை