நடிகை மீனாவின் கணவருக்கு கொரோனா கிடையாது!! வதந்தியை பரப்பாதீங்க!! மா.சு. பளிச்!!

 


 நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனவால் உயிரிழந்தார் என்ற தகவல் தவறானது, அவர் நுரையீரல் பாதிப்பால் உயிரிழந்ததாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

  

கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக 4 மணி நேரத்தில் 50 ஆயிரம் முகக்கவசம் மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் பிரச்சாரம் நிகழ்ச்சியை சென்னை மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்ரமணியன் மற்றும் மாநகராட்சி மேயர் துணை உள்ளிட்டோர் பங்கேற்று தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில்  வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மாநகர பேருந்தில் பயணித்தோர் உட்பட அனைவருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்  முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

 தமிழ்நாடு முழுவதும் 8970 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று ஐம்பதாயிரம் முகக்கவசம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது  என்றும் தெரிவித்தார்.  ஜூலை  10ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது என கூறியவர், ஒரே நாளில் ஒரு லட்சம் இடங்களில் முகாம் நடத்தப்படும் என்றும், காசநோய் இல்லா தமிழகம்  என்ற நிலையை எட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம் என்றும்,  நாளை மறுநாள்  23 நடமாடும் "எக்ஸ்ரே" வாகன சேவையை நொச்சிக்குப்பம் பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார். 
மேலும், கடந்த டிசம்பர் மாதமே மீனாவின் கணவர் வித்யாசாகர்க்கு  நுரையீரலில் தொற்று ஏற்பட்டது என்றும், கடந்த 95  நாட்கள்  அவர் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு எக்மோ சிகிச்சையில் இருந்தார் என கூறிய அமைச்சர் , அவர் கொரோனவால் உயிரிழந்தார் என்ற தகவல்  முற்றிலும் தவறானது  என தெரிவித்தார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை