undefined

அம்மாடியோவ்......! 1,00,000  பேருக்கு தடபுடல் கல்யாண விருந்து !! அசத்தும் நயன் விக்கி ஜோடி!!

 

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். இதனையடுத்து இருவரும் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது. திருப்பதியில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமண மண்டபத்தை நேரில் சென்று பார்த்து வந்ததாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் நாளை (9) நடக்கிறது. இதனை விக்னேஷ் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் விக்னேஷ் சிவன் கூறியதாவது, தொழில் ரீதியாக உங்கள் ஆசிர்வாதம் எனக்கு எப்படி இருந்ததோ, அதுபோலவே எனது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் அந்த ஆசீர்வாதங்கள் தேவை. எனது தனிப்பட்ட வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறேன்.

ஜூன் 9 ஆம் தேதி, என் காதலியை திருமணம் செய்து கொள்கிறேன். நயன்தாரா, குடும்பம் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் மகாபலிபுரத்தில் திருமணம் நடக்கிறது. முதலில், திருப்பதி கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டோம், ஆனால் சில பிரச்சனைகளால் நடக்கவில்லை. எங்கள் திருமண புகைப்படங்களை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். ஜூன் 11 மதியம், நானும் நயன்தாராவும் உங்களை (ஊடகங்களை) சந்திப்போம், நாம் ஒன்றாக மதிய உணவு சாப்பிடுவோம் என கூறி உள்ளார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் திருமணத்தில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்கிறார்கள் திருமண இடத்திற்கு வெளியே பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது . முக்கிய விருந்தினர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படும் என்றும், அது இல்லாமல் அரங்கிற்குள் நுழைய முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015-ம் ஆண்டு வெளியான ‘நானும் ரவுடி தான்’ படத்தின் ஷூட்டிங்கில் இருந்தே நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக காதலித்து வரும் இந்த ஜோடி கடந்த சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து ஜூன் 9-ம் தேதி திருமணம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று காலை பிரம்ம முகூர்த்தத்தில் இந்து முறைப்படி நடிகை நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். இவர்கள் திருமணத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சரத்குமார், ராதிகா உட்பட  பல பிரபலங்கள் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருமண விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் சுமார் 1 லட்சம் பேருக்கு நயன்தாரா - விக்கி ஜோடி மதிய விருந்து அளிக்கின்றனர்.

இதேபோல் தமிழகம் முழுவதும்  உள்ள ஆதரவற்ற இல்லங்களில் இருக்கும் 20 ஆயிரம் குழந்தைகளுக்கும் மதிய உணவு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது திருமணத்தை முன்னிட்டு ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டல் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை