BIG NEWS!! இது குறித்து புகார் தெரிவித்தால் 10 % வெகுமதி!! பொதுமக்களுக்கு அரிய வாய்ப்பு!!

 

வரி ஏய்ப்பு குறித்து வணிகவரித் துறைக்கு தகவல் தெரிவிக்கும் பொதுமக்களுக்கும், வரி ஏய்ப்பினை சிறப்பாக கண்டுபிடித்து வரி வசூல் செய்யும் வணிகவரித் துறை அலுவலர்களுக்கும் வெகுமதி வழங்க நடப்பாண்டில் 1.66 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் வணிக வரித்துறை ஆணையர் தமிழக அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதன்படி, வரி ஏய்ப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட இழப்பு தொகையில் 10% வெகுமதியாக தரப்படும் என்றும், அதேபோன்ற இடைக்கால வெகுமதியாக 5% அல்லது ரூ.10 ஆயிரத்துக்கும் வழங்கப்படும். ரூ.4 லட்சம் மேல் தருவதாக இருப்பின் வணிக வரிகள் ஆணையரின் பரிந்துரையின் பேரில் அரசாங்கத்தின் ஒப்புதலுடன் ஒரு தனிநபர் அல்லது தகவல் அளிப்பவர்களின் குழுவிற்கு வெகுமதி அளிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அரசு அலுவலராக இருப்பின், அதாவது ஒரு தனிப்பட்ட அதிகாரிக்கான வெகுமதிகள் ரூபாய் ஒரு லட்சத்துக்கும்  மிகாமல் அனுமதிக்கப்படும் என்றும்,  வெகுமதியாக ரூ.4,00,000 வரை ஒரு தனிப்பட்ட அதிகாரி அல்லது குழுவிற்கு, பேரில் அரசாங்கத்தின் ஒப்புதலுடன்,வணிக வரித்துறை ஆணையரின் சிபாரிசின் பேரில் அனுமதிக்கப்படலாம் என்றும், ஒரு அதிகாரி ரூ 10 லட்சம் வரை வெகுமதி பெற தகுதியுடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கான வெகுமதிகளை சென்னை-1, சென்னை-2,  திருச்சி,மதுரை, திருநெல்வேலி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், வேலூர் போன்ற அலுவலகங்களுக்கு தேவையான நிதி வழங்கப்பட வேண்டும் என்றும், தகவல் தருபவர்களுக்கு ரூ.62 லட்சம், அதிகாரிகளுக்கு ரூ.1.04 கோடி மொத்தம் ரூ.1.66 கோடி வழங்க வேண்டும்.  வணிக வரி ஆணையரின் முன்மொழிவை கவனமாக ஆய்வு செய்த அரசு, அதை ஏற்றுக்கொண்டு ரூ.1.66 கோடியை 2022-2023ம் நிதியாண்டிற்கான தகவல் வழங்குபவர்கள் மற்றும் வணிக வரித் துறை அதிகாரிகளுக்கு வெகுமதிகளை வழங்க ஆணையிடப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால் அதன் மூலம் வரி வசூல் செய்யும் ரூ.1 லட்சத்துக்கு மேற்பட்ட இழப்பு தொகையில் 10% வெகுமதியாக தரப்படும்”. இதற்காக ஒரு கோடியே 66 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை