undefined

BREAKING!! அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கைது!!

 

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை போலீசாரை குண்டுகட்டாக கைது செய்தனர்.மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளது. இந்த கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் அகற்றக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை திடீரென உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

உரிய அனுமதியின்றி 200-க்கும் மேற்பட்ட ஆதரவர்களுடன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது, உடனடியாக காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதையடுத்து ஆர்.பி.உதயகுமாருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் உண்ணாவிரத போராட்டத்தை முடிக்க மறுத்ததால் அவரை கைது செய்தனர்.இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவ்ம  அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை