உஷார்!! 58 நாடுகளில் 6000க்கும் அதிகமானோருக்கு குரங்கு அம்மை!!  

 

உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுவரையில் 58 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது. உலகளவில், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குரங்கு அம்மை நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்த அவசர கூட்டத்தை நடத்த உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச அளவில், கொரோனா தொற்றை போல குரங்கு அம்மை நோய் தொற்று அதிகரிப்பால்  பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் உலக சுகாதார நிறுவனம், அவசர கூட்டத்தை கூட்ட உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.


குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்ட 6 ஆயிரம் பேரில் 85 சதவீதம் பேர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 24ம் தேதி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘கையில், குரங்கு அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது மற்றும் கவலைக்குரியது’’ என தெரிவித்திருந்தார்.


குரங்கு அம்மை தொற்றால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்ற போதிலும், கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகியவை குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகின்றன. மேலும் தற்போதைய சூழலில் இந்நோய் சமூக பரவலாக உருவெடுத்துள்ளது வேதனை அளிக்கிறது. வளர்ப்பு பிராணிகள் உள்பட வனவிலங்குகளுக்கு பரவும் ஆபத்தும் உள்ளது. இது உலகம் முழுவதும் விரிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை