400 பேர் மீது வழக்கு பதிவு!! அதிமுக அலுவலகம் எதிரே மோதல்!!

 

அதிமுகவில் உட்கட்சி பூசல், ஒற்றை தலைமை பிரச்சனை வெடித்துள்ளது. நேற்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக  தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஓபிஎஸ் சை கட்சியின் அனைத்து பொறுப்புக்கள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நீக்கினார். இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பெரும் போராட்டம் வெடித்தது.

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டனக் குரல்கள் எழுப்பினர். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் 145 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையும் மீறி ஓபிஎஸ் தர்ணா போராட்டம் நடத்தினார். அதிமுக  தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பூட்டை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்குள் சென்றனர். அதிமுக தலைமை அலுவலகத்தின் உள்ளே இருந்த ஆவணங்களை கைப்பற்றி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரின் பிரச்சார வாகனத்தில் ஏற்றினர். 


இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஈபிஎஸ்  மற்றும் ஓபிஎஸ் தரப்பில் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்தப் புகாரின் அடிப்படையில் ஈபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும், ஓபிஎஸ் தரப்பில் 200 பேர் மீதும் காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை