undefined

ஆறாக ஓடிய சமையல் எண்ணெய்!!  குடம், வாளிகளில் பிடித்து சென்ற பொதுமக்கள்!!!

 

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் சல்லகுண்டலா கிராமத்தின் வழியாக உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 6 மணி அளவில் சமையல் எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்றது. அப்போது அந்த லாரி, திடீரென சாலையின் நடுவில் இருக்கும் தடுப்பின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதனால் டேங்கர் லாரியில் உடைப்பு ஏற்பட்டு சமையல் எண்ணெய் சாலையில் ஆறாக ஓடியது. இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் கேன்கள், குடங்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றுடன் விரைந்து சென்று போட்டிப்போட்டு எண்ணெய்யை பிடித்து சென்றனர். 

மேலும் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள தங்களது உறவினர்கள், நண்பர்களுக்கும் இதுகுறித்து தெரிவித்தனர். அவர்களும் எண்ணெய்யை பிடிக்க போட்டி போட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

<a href=https://youtube.com/embed/aEAekdSOhU4?autoplay=1><img src=https://img.youtube.com/vi/aEAekdSOhU4/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Oil Tanker Overturns, Locals Gathered To Collect Oil | AP | V6 News" width="640">

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகரிகல்லு போலீசார் கிராம மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதன்பின் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியை மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனிடையே கேன்கள் மற்றும் குடங்களில் சமையல் எண்ணெயை பிடித்த மகிழ்ச்சியில் அங்கிருந்த பெரும்பாலான மக்கள் 'செல்பி' எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை