வாகன ஓட்டிகளுக்கு கூல்ட்ரிங்ஸ், தொப்பி பரிசு!! காவல்துறை அசத்தல் !!

 

 

இருசக்கர வாகன விபத்துகளைக் கட்டுப்படுத்த மற்றும் குறைக்கும் நோக்கில் சென்னையில் கடந்த 23-ம் தேதி முதல் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்கள் பின் இருக்கையில் அமர்ந்து இருந்தாலும் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2,250-க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் அவர்களிடமிருந்து ரூ. 100 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அருகே மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து ஆய்வாளர் தங்கமணி மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளை ஊக்கப்படுத்தும் வகையில் குளிர்பானம் மற்றும் தொப்பிகளை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி மற்றும் போக்குவரத்து போலீசார் வழங்கினர்.

மேலும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும்போது ஓட்டுபவரும், பின்னிருக்கையில் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும். இதனால் விபத்து ஏற்பட்டாலும் உயிரிழப்பு தவிர்க்கப்படுகிறது. அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். குடிபோதையில் வாகனங்களை இயக்கக்கூடாது என அறிவுரை வழங்கினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை