வில்லியம்சனுக்கு கொரோனா உறுதி!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இன்று இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இன்றைய 2வது டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் கலந்து கொள்ள முடியாததால் நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "இது போன்ற ஒரு முக்கியமான போட்டிக்கு முன்னதாக கேன் வில்லியம்சன் விலக நேரிட்டது உண்மையில் பரிதாபமான நிலை தான். "இந்த நேரத்தில் நாங்கள் அனைவரும் அவருக்காக பரிதாபப்படுகிறோம், இதனால் அணி வீரர்கள் மட்டுமல்ல அவருமே மிகுந்த ஏமாற்றத்தில் தான் இருப்பர்" எனக் கவலை தெரிவித்துள்ளார்.
வில்லியம்சன் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார். இதனால் டாம் லேதம்அணியை வழிநடத்துவார். லீசெஸ்டர்ஷயர் அணிக்காக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஹமிஷ் ரூதர்ஃபோர்ட் , கேன் வில்லியம்சனுக்கு மாற்றாக அழைக்கப்பட்டுள்ளார் வில்லியம்சன் விலகல், ஆல்ரவுண்டர் கொலின் டி கிராண்ட்ஹோம் குதிகால் காயத்தால் விலகியது போன்ற காரணங்களால் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டில் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து 3 போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என்ற கணக்கில் ஏற்கனவே பின் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணி வீரர்கள் பட்டியல்
டாம் லேதம் (கேப்டன்), வில் யங், டெவன் கான்வே, டேரில் மிட்செல், டாம் ப்ளன்டெல், ஹமிஷ் ரூதர்ஃபோர்ட், ஹென்றி நிக்கோல்ஸ், கைல் ஜேமிசன், டிம் சவுத்தி, அஜாஸ் படேல், டிரென்ட் போல்ட், நீல் வாக்னர், கேம் பிளெட்சர், மாட் ஹென்றி, மைக்கேல் பிரேஸ்வெல்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!