undefined

டெட் தாள் 1 அட்மிட் கார்டு வெளியீடு!! பதிவிறக்கம் செய்யும் முறை!!

 

இந்தியாவில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான டெட் தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டு  வருகிறது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய ‘டெட்’ தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியமாகிறது. 

தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்சிடிஇ) விதிமுறையின்படி ஆண்டுதோறும் டெட் தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் 2012 முதல் 2019 வரை 5 முறை ‘டெட்’ தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 95 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.நடப்பு ஆண்டுக்கான டெட் தேர்வுக்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என, மார்ச் 7ல் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இதன் அடிப்படையில், மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரை ஆன்லைன் வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஏப்ரல் 18 முதல் 26 வரை விண்ணப்ப பதிவுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அக்டோபர் மாதம் 14 முதல் 20 வரை உள்ள தேதிகளில் தாள்-1 ற்கு மட்டும் முதற்கட்டமாக கணினி வழியில் தேர்வுகள் நடத்தவுள்ளதாக தெரிவித்தது. இந்நிலையில், கணினி வழி நடத்தப்படும் தாள்-1 தேர்விற்கான கால அட்டவணையை தேர்வு வாரியம் வெளியிட்டது.

மேலும், தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மாவட்ட அனுமதிச் சீட்டு 1- ஐ (District Admit Card-I) வெளியிடப்பட்டுள்ளது. www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் தங்களது User Id மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.அதே சமயம், தேர்வு மையம் (இடம்) குறிப்பிடும் அனுமதிச் சீட்டு-2 (Venue - Admit Card-II) திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .நடப்பாண்டில்  கணினிவழித் தேர்வாக (Computer Based Examination) நடத்தப்படுவதால், பயிற்சித் தேர்வு (Practice Test) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் நாளை மறுநாள் அக்டோபர்  12ம் தேதி முதல் trbpracticetest என்ற போர்ட்டலில் பயிற்சித் தேர்வை தேர்வர்கள் மேற்கொள்ளலாம் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!