undefined

ஆயுள் முழுவதும் செல்வம் நிலைத்திருக்க இன்று இதை செய்ய மறக்காதீங்க!!

 

இறைவனை வழிபட காலம் நேரம் தேவையில்லை. அனைத்து நாளும் சிறந்த நாளே.  நம் கர்ம வினைகளுக்கேற்ப குறிப்பிட்ட தினங்களில் செய்யும் சில செயல்களால் நம் சிரமங்கள் குறைந்து வளமான வாழ்வு பெறலாம் . நட்சத்திரங்கள் மற்றும் திதிகளின் அடிப்படையிலேயே தான் காரியங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்பது நம் ஜோதிட வல்லுனர்களின் கூற்று. அதிலும் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் திதிகளுக்கு தனிச் சிறப்பு உண்டு.

அதன்படி அட்சய திருதியை தினத்தில் நம் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் பெருகும் என்பது ஜோதிட வல்லுனர்கள் வாக்கு .நாம் அனைவரும அதனை தவறாக புரிந்து கொண்டுள்ளோம்.  தங்கம் வாங்கினால் மட்டும்தான் ஐஸ்வர்யம் பெருகும் என்று அர்த்தமாகாது. இந்த நன்னாளில் பிறருக்கு உதவும் வகையில், தானம் வழங்குவது, புண்ணிய காரியங்களை செய்வதும் சிறப்பு வாய்ந்தவையாக அமையும். எனவே தங்கம் வாங்குவதை விட தானம் செய்வது சிறப்பு வாய்ந்தது. இதையே தான்  புராணக்கதைகளும் சுட்டிக்காட்டுகின்றன.

அந்த வகையில் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதி “அட்சய திருதியை” தினம் ரொம்பவே விசேஷம்.’அட்சயம்’ என்றால் வளர்வது, அள்ள அள்ளக் குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற அனைத்துக் காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும் என்பது ஐதிகம். அதனாலே தான் பொதுமக்கள் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர்.

ஒரு மனிதன் வாயில் இருந்து போதும் என்ற சொல் வருகிறது என்றால், அது உணவுக்காக மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட திருப்தியளிக்கும் உணவினை தானம் செய்வதால், நவகிரகங்களில் ஆசி கிடைக்கும். வீட்டில் என்றென்றும் செல்வம் நிலைத்திருக்கும். தானமாக உணவுப் பொருளையோ, உணவுப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் மளிகை சமான்களாகக் கூடவோ இருக்கலாம். இயன்ற அளவுக்கு செய்யும் தானம் கூட இறைவனின் அருளை பெற உதவும்.

குங்குமம் மங்கலத்தின் அடையாளம். குங்குமம் மற்றும் குளிர்ச்சி தரும் சந்தனத்தையும் அட்சயதிருதியை தினத்தன்று தானம் செய்வது சுபிட்சத்தை தரும். தாம்புலம் என்று அழைக்கப்படும் வெற்றிலை, பாக்குடன் சேர்த்து மஞ்சள், குங்குமம், சந்தனம் இவற்றை கோவில்களில் வைத்து கொடுப்பதன் மூலம் சுக்கிரனின் பார்வை கிடைக்கும். குங்குமம் சுக்கிரனின் அம்சமாகும். சந்தனத்தை தானமாக வழங்குவதன் மூலம் மன நிம்மதி, மன அமைதி கிட்டும்

தங்கம் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. தங்கம் வாங்க இயலாதவர்கள் வீட்டிற்கு உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாம்.அட்சய திருதியை தினத்தில் குழந்தைகளை படிக்க செய்வது முதலில் கல்வி கற்பித்தல் ஆகியவற்றை தொடங்கினால் கல்விச் செல்வம் பெருகும்.அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்தாலும் வீட்டில் அன்னப்பஞ்சம் நீங்கி வளமான செழிப்பான வாழ்க்கையை பெறலாம்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை