இன்று கர்நாடகாவில்  நிலநடுக்கம்!!  பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்!! 

 

கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் இன்று காலை 6.22 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.6 ஆக பதிவாகி உள்ளது. மேலும் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவெடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அலறடியடித்துக் கொண்டு வீதிக்கு ஓடி வந்து, குடும்பம் குடும்பமாக சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதற்கு முன்னர் கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி அதிகாலை ஹாசன் மாவட்டத்தில் 3.4 ரிக்டர் அளவிலும், ஜூன் 28ம் தேதி காலை 7.45 மணிக்கு குடகு மாவட்டத்தில் 3.5 ரிக்டர் அளவிலும் லேசான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. மீண்டும் அதே நாளில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் மிகவும் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 2.3 ரிக்டராக பதிவானது. 

இப்படி கர்நாடக மாநிலத்தில் கடந்த 2 வாரத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை