பிரபல நடிகர் புற்றுநோயால் உயிரிழப்பு! 30 வயதிலேயே உயிரிழந்த சோகம்!

 

பிரபல நடிகர் கிஷோர் தாஸ் தனது 30வது வயதிலேயே புற்றுநோயால் உயிரிழந்தது ரசிகர்களையும், திரையுலகினரையும் அதிர செய்துள்ளது. 

அசாமிய திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்தவர் கிஷோர் தாஸ். தனது 30வது வயதை எட்டுவதற்குள்ளாகவே கிஷோர் தாஸ், தான இவர் நடிப்பு, நடனம், மாடல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி என பன்முகம் கொண்டவராக விளங்கினார். 300க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களில் நடித்துள்ளார்.

கிஷோரின் ‘துருத் துருத்’  என்ற இசை வீடியோ அசாமின் மிகவும் பிரபலமான வீடியோவாக மாறியது. இதுதவிர மேலும் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். கிஷோர் தாஸ் கடைசியாக 'தாதா துமி டஸ்டோ போர்' என்ற அசாமிய திரைப்படத்தில் நடித்திருந்தார்.  

இதனிடையே நடிகர் கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கவுஹாத்தியில் சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயர்தர சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தார்.

சென்னையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிஷோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கிஷோரின் உயிர் பிரிந்தது. அவரின் இறப்பு செய்தி அசாமி திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

சக நடிகர்கள், ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் கிஷோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கிஷோர் தாஸின் இறுதிச் சடங்குகள் சென்னையிலேயே நடத்தி முடிக்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை