undefined

பிங்க் பேருந்துகளில் கட்டணம்?!  பரிதவிக்கும் பெண்கள் !!

 

தமிழகம் முழுவதும் பெண்கள் அரசுப் பேருந்தில்  இலவச பயணம் செய்யலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி பிங்க் நிறப் பேருந்துகள் தனியாக பெண்களுக்காக விடப்பட்டுள்ளன. இந்த  பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம்.

 இலவச பேருந்துகளில்  பேருந்துக்கு முன்னும், பின்னும் பிங்க் நிறம் பூசப்பட்டிருப்பது தான் அதற்கான அடையாளம். இதை பார்த்த பெண்கள் இலவச பேருந்து என்பதை எளிதாக அடையாளம் கண்டு அதில் ஏறி பயணம் செய்து வருகின்றனர்இந்நிலையில் பிங்க் நிற பேருந்தில் சில சமயம் பச்சை போர்டு வைத்து ஓட்டப்படுகிறது. இதை கவனிக்காமல் இலவச பேருந்து என்று நினைத்து அதில் பெண்கள் பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் கண்டக்டர் டிக்கெட் எடுக்க சொல்லி கேட்கும் போது வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் வாக்குவாதம் முற்றி பெண்கள் சிலர் நடுவழியில் இறக்கி விடப்படுவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன.

அவசரமாக செல்ல வேண்டும் வேறு என்ன செய்வது என்று பெண்கள் டிக்கெட் எடுத்து பயணம் செய்வதாகவும் புகார்கள் வருகின்றன. இதைத்தொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிங்க் நிற பேருந்தில் இலவச பயணத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அதில் பச்சை நிற போர்டு வைப்பது சரியில்லை என்றும் பெண்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!