முன்னாள் எம்.எல்.ஏ மகன் கைது!! 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை தட்டித் தூக்கிய காவல்துறை!!

 

உத்தரபிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் நிஷத் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. 4 முறை பதவி வகித்தவர்  விஜய் மிஸ்ரா. கடந்த 2020ம் ஆண்டு இவர் மீது சுமத்தப்பட்ட கொலை மிரட்டல், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட விஜய் மிஸ்ராவின் மனைவி ராம்லாலி மிஸ்ரா தற்போது ஜாமினில் வெளியில் உள்ளார். 

இதற்கிடையில் இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக,  கடந்த 2020ம் ஆண்டு விஜய் மிஸ்ராவின் மகன் விஷ்ணு மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் உத்தரபிரதேசத்தில் பெரும் அரசியல் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் விஷ்ணு மிஸ்ரா தலைமறைவானார். 

பாலியல் வன்கொடுமை வழக்கில் தலைமறைவான விஷ்ணு மிஸ்ராவை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இருப்பினும் அதில் பலனில்லாமல் போனதால் விஷ்ணு மிஸ்ரா குறித்து தகவல் கொடுத்தால் ரூ.20 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது. பின்னர், அந்த தொகை ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த விஷ்ணு மிஸ்ராவை உத்தரபிரதேச போலீசார், மராட்டிய மாநிலம் புனேவில் வைத்து நேற்று அதிரடியாக கைது செய்தனர். இன்று உத்தரபிரதேசம் அழைத்து வரப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன் விஷ்ணு மீஸ்ரா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். கோர்ட்டு மற்றும் சிறை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை