தொழிற்சாலையில் கேஸ் கசிந்து  200 பேருக்கு திடீர் வாந்தி, மயக்கம்!! 

 

.ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி மாவட்டம், அச்சுதாபுரத்தில் போரஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் நேற்று காலை வழக்கம் போல் பெண் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென்று அமோனியா வாயு கசிந்துள்ளது.

இதனை சற்றும் எதிர்பாராத பெண் பயணிகள் ஒருவர் பின் ஒருவராக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர். இவ்வாறு மொத்தம் 200க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் வாந்தி, மூச்சுத்திணறல் ஏற்ட்டு மயங்கி விழுந்தனர்.இதை பார்த்த மற்ற ஊழியர்கள் விரைந்து அனைவரையும் மீட்டு கார் மற்றும் அங்குள்ள மற்ற வாகனங்களில் ஏற்றிக் கொண்டு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஊழியர்கள் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக மயங்கி விழுந்ததை பார்த்து பீதியடைந்த சில தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு அலறியடித்து வெளியேறியதால் பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் இல்லாமல் போனது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த அம்மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், மேற்கொண்டு வாயு கசிவு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். 


இதுகுறித்து ஆந்திர தொழிற்சாலை துறை அமைச்சர் அமர்நாத் கூறும்போது, ‘‘இந்த விபத்து குறித்த அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதன் பின்னர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறினார்.அமோனியா வாயு கசிந்து பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்து சிகிச்சை பெற்று வருவதால், அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் கவலையில் உள்ளனர்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை