முந்துங்க! இன்று முதல் தீபாவளிக்கு பேருந்து முன்பதிவு துவக்கம்!

 

தீபாவளிக்கு முந்தைய நாள் பயணத்துக்கான பேருந்து முன்பதிவு இன்று துவங்குகிறது. கடைசி நேர நெரிசலை தவிர்ப்பதற்கும், ஆம்னி பேருந்துகள் வசூலிக்கும் கொள்ளைக் கட்டணத்தில் இருந்து தப்பவும் சொந்த ஊருக்கு திட்டமிடுபவர்கள்  மறக்காமல் இன்றே முன்பதிவை செய்துடுங்க. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஊரடங்கு காரணமாக பண்டிகைகள் கோலாகலமாக கொண்டாடப்படவில்லை. நடப்பாண்டில் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதை அடுத்து மக்கள் ஒவ்வொரு பண்டிகையையும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  பிழைப்புக்காக சொந்த ஊர் விட்டு சென்னை, கோவை போன்ற பெருநகரங்களை தேடி வந்தவர்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர் திரும்புவர்.

இவர்களின் வசதிகளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு விரைவு பஸ்களில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகி உள்ளது.

இன்னும் ஒரு மாத காலம் உள்ள நிலையில் பயணிகள் தங்கள் பயணத்தை உறுதி செய்ய இது வசதியாக இருக்கிறது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி லட்சக்கணக்கான பொது மக்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடனும், உறவினர்களுடனும் தீபாவளியை கொண்டாடுவது வாடிக்கை. பயணிகள் தீபாவளிக்கு முந்தைய தினம் அக்டோபர் 23ம் தேதி பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு தொடங்குகி உள்ளது. www.tnstc.comஎன்ற இணைய தளம் வழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

டிக்கெட் முன்பதிவு குறித்து விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘‘30 நாட்களுக்கு முன்னரே அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே இன்று தொடங்கியுள்ள டிக்கெட் முன்பதிவு மூலம் 1,000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

சென்னையில் இருந்து விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 போக்குவரத்து கழகங்களில் இருந்தும் பேருந்துகள் பெறப்பட்டு தீபாவளி டிக்கெட் முன்பதிவில் இணைக்கப்படும்’’ என்று கூறினார்கள். இதனால் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் நிம்மதி பயணத்தை மேற்கொள்ள முடியும்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!