உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!! அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!!

 


அமெரிக்காவில் பணவீக்க விகிதம் 8 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்ததால் அந்நாட்டின் மத்திய வங்கியான பெடரல் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பணவீக்கம் கடுமையாக அதிகரித்து வருகிறது.பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து வட்டி விகிதத்தை பெடரல் வங்கி உயர்த்தி வருகிறது. இது இன்னமும் கடுமையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலிக்கிறது.

சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. நேற்று உயர்ந்து விற்பனையான தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 20 ரூபாய் உயர்ந்து, ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து, ரூ.38,200-க்கு விற்பனையாகிறது. 

அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,895-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 16 ரூபாய் உயர்ந்து, ரூ.3,911-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,000 உயர்ந்து, ரூ.67,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை