மீண்டும் சற்றே உயர்ந்த தங்கத்தின் விலை!!! அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!!!

 

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. சர்வதேச சந்தையின் விலை நிலவரத்தை பொறுத்து சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது. சமீபகாலமாக  சில நாட்கள் தங்கத்தின் விலை குறைந்தாலும் அதற்கு அடுத்த நாளே தங்கத்தின் விலை அதிகரித்து விடுகிறது.

அதன்படி  ஜூலை முதல் நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.856 உயர்ந்து, சவரன் ரூ.38,280 க்கு விற்பனை செய்யப்பட்டது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. ஆனால்  அடுத்த நாளே தங்க விலை சவரனுக்கு ரூ.38,336 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.இந்த விலை உயர்வால் தங்க முதலீட்டாளர்கள், நகைப் பிரியர்கள், குறிப்பாக இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 28,29,30  தேதிகளில்  தங்கத்தை விலை எதிர்பாரா வகையில் மிகவும் குறைந்து காணப்பட்டது . அந்த நேரத்தில் ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை  ரூ.4800க்கு குறைவாகவும், ஒரு சவரன் ரூ. 38க்கு குறைவாகவும் விற்பனை செய்யப்பட்டது.  இதனால் நகை பிரியர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.  

ஆனால், இம்மாத தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.  ஜூலை 1ல் தங்கத்தின் விலை ரூ.856 அதிகரித்து ஒரு  சவரன் ஆபரண தங்கத்தின் விலை  ரூ.38280 க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு மறுநாளான சனிக்கிழமை சவரன் ரூ.56 அதிகரித்து ஒரு சவரன் விலை  ரூ.38336க்கும், ஒரு கிராம் ரூ.4792க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.56 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 38,440க்கும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ  ரூ.4,805க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின்விலை அதிகரித்த நிலையில் வெள்ளியின் விலையும் சற்றே அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் அதிகரித்து  ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை