குட் நியூஸ்! இந்தியாவில் குறைந்து வருகிறது தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை!

 

நல்ல செய்தியாக இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை கணிசமான அளவுக்கு குறைந்துள்ளது மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத் துறையினரை நிம்மதி பெருமூச்சுவிடச் செய்துள்ளது.

கடந்த 6 வார காலமாக இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்து உயர்ந்து வருகிறது. இது சுகாதாரத்துறையினர் மத்தியிலும் மத்திய அரசையும் கதிகலங்க வைத்துள்ளது. தொற்று அதிகரித்து வரும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தினசரி கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளது. நேற்று 16,135 ஆக பதிவாகிய தொற்று கடந்த 24 மணிநேரத்தில் சற்று குறைந்து 13,086 ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,35,18,564 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று இந்த எண்ணிக்கை 24 ஆக பதிவாகி இருந்தது. உயிரிழப்பும் கணிசமான அளவில் குறைந்துள்ளது. இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 5,25,424 ஆக பதிவாகி உள்ளது.

கடந்த ஒரே நாளில் 12,456 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் இதுவரை தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,28,91,933 ஆக பதிவாகி உள்ளது. 

இந்தியா முழுவதிலும் தற்போது மருத்துவமனையில் 1,14,475 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து டெல்லி, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை